Take a fresh look at your lifestyle.

ரஜினி, கமலை சேர்த்து இயக்கும் நெல்சன்!

21

பல தசாப்தங்களுக்கு பிறகு ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியும், ‘உலக நாயகன்’ கமலும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இருவருமே பல இயக்குநர்களிடம் கதை கேட்டனர்.

லோகேஷ் கனகராஜ், சொன்ன கதை இரு உச்ச நட்சத்திரங்களுக்கும் பிடித்திருந்தது. ஓகே சொல்லி விட்டனர்.

ஆனால் ரஜினியை வைத்து லோகேஷ் கனகராஜ் டைரக்டு செய்த ‘கூலி’ திரைப்படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. இதனால் ரஜினி அப்செட் ஆனார். லோகேஷுக்கு சாரி சொல்லி விட்டார்.

மீண்டும் இருவரும் வேறு சில இயக்குநர்களிடம் கதை கேட்டனர். நெல்சன் திலீப்குமார் சொன்ன ‘ஒன் லைன்’ இருவருக்குமே திருப்தி அளித்தது. ஆக்ஷன் கதை. ரஜினிக்கும், கமலுக்கும் சரி சமமான பாத்திரம். இருவரும் நெல்சனை ‘டிக்’ அடித்தனர்.

இப்போது நெல்சன், ரஜினியின் ‘ஜெயிலர்-2’ பட வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இதனை முடித்து விட்டு, ரஜினி, கமல் இணையும் படத்துக்கான முழு ஸ்கிரிப்டையும் தயார் செய்ய உள்ளார்.

பிற நடிகர் – நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்து இரு நட்சத்திரங்களுடன் ஆலோசனை நடத்தி தீர்மானிப்பார். சட்டசபை தேர்தல் வருவதால், அடுத்த ஆறேழு மாதங்களுக்கு கமல் பிரச்சாரத்துக்கு சென்று  விடுவார்.

எனவே ரஜினி – கமல் இணையும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ஆரம்பம் ஆகும் என்று தெரிகிறது.

ஜெயிலர்-2 ரிலீசுக்கு பிறகே, இந்தப் படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்படுகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.