வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புதிய படம் ‘அரசன்’. வடசென்னை பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தில் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத் தில் நடிக்கிறார்.
ஆண்ட்ரியா, சமுத்திரகனி, விக்ராந்த், கிஷோர், சைத்ரா ஆர்ச்சர் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.
மதுரையில் நடைபெற்ற முதல்கட்டப் படப்பிடிப்பு நிறைவடைந்திருக்கிறது.
கபடி விளையாட்டு வீரராக சிம்பு நடித்த காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. 2-ம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையில் முன்னணி நடிகையான பிரியங்கா மோகனும் படத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுதவிர ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யோக லட்சுமியும் நடிக்கிறாராம்.
இந்த ஆண்டின் இறுதியில் படத்தை ரிலீசுக்கு கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளார்கள்.