நடிகர் நிவின்பாலி, தனது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் ரசிகர்கள் அவரது திரை வாழ்வின் ஒளிமிகுந்த கட்டத்தைக் கொண்டாடுகிறார்கள்.
அடுத்த ஆண்டு, நிவின்பாலிக்கு மிகச்சிறந்த ஆண்டாக பல்வேறு வகை படங்களால் நிரம்பியுள்ளது.
முதலில் 2025 கிறிஸ்மஸில் வெளியாகும் “சர்வம் மாயா” என்ற ஹாரர் – காமெடி திரைப்படம் மூலம் அவர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜு வர்கீஸுடன் மீண்டும் இணைந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பிரேமலு படக்குழுவின் “பெத்லகேம் குடும்ப யூனிட்” என்ற ரொமான்ஸ் காமெடி படம் வெளியாகிறது. அதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார்.
நவம்பரில் வெளியாகும் “பேபி கேர்ள்” என்ற திரில்லர் படத்தில் நிவின் பாலி அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
அதேசமயம், தமிழில், இயக்குநர் ராம் இயக்கியுள்ள “ஏழு கடல் ஏழு மலை” என்ற சைக்கலாஜிகல் ரொமான்ஸ் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
தமிழ்த் திரையுலகின் அடுத்தக்கட்ட மிகப்பெரிய அங்கீகாரமாக, 2026-ல் வெளியாகும் “பென்ஸ்” திரைப்படத்தில் நிவின் பாலி – லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸில் வில்லன் வால்டர் என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார்.

அதோடு, B. உன்னிகிருஷ்ணன் இயக்கத்தில், கோகுலம் மூவீஸ் தயாரிக்கும் ஒரு அதிரடி பொலிட்டிக்கல் திரில்லர் திரைப்படமும் உருவாகி வருகிறது.
திரை உலகைத் தாண்டியும், தனது முதல் வெப் சீரிஸ் “Pharma” மூலம் டிஜிட்டல் துறையிலும் அறிமுகமாகிறார்.
தனது தயாரிப்பு நிறுவனமான Pauly Jr. Pictures மூலம் அவர் பல பெரிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார்.
அவரது ரசிகர்களுக்கு, இந்த பிறந்தநாள் ஒரு புதிய சினிமா திருவிழாவின் தொடக்கமாக அமைந்துள்ளது