‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியும், இயக்குநர் நெல்சனும் இணைந்த முதல் படம் ‘ஜெயிலர்’. 2023 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம் வசூலை வாரிக் குவித்தது.
தனது படத்தின் இரண்டாம் பாகம் எதிலும் இதுவரை நடித்திராத ரஜினி, முதன் முறையாக ‘ஜெயிலர்’ இரண்டாம் பாகத்தில் நடிக்கிறார். நெல்சனே டைரக்ட் செய்கிறார்.
முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, மோகன்லால், சிவராஜ் குமார் ஆகியோருடன் எஸ்.ஜே.சூர்யா, பாலகிருஷ்ணா, மிதுன் சக்ரவர்த்தி ஆகியோரும் இதில் நடிக்கிறார்கள்.
வழக்கம்போல் அனிருத் இசை அமைக்கிறார். படப்பிடிப்பு முடியும் தறுவாயில் உள்ளது. அடுத்த ஆண்டு ஜுன் மாதம் ‘ஜெயிலர்-2’ வை ரிலீஸ் செய்ய, படத்தைத் தயாரிக்கும் சன் பிக்சர்ஸ் திட்டமிட்டுள்ளது.
இந்தப் படத்தின் ஷுட்டிங்கின்போது, ரஜினியிடம் நெல்சன் சொன்ன கதை, அவருக்கு மிகவும் பிடித்து போயிற்று. அந்த கதையில் நடிக்க ஓகே சொல்லி விட்டார் ரஜினி.
ஜெயிலர்-2 வை முடித்து விட்டு ரஜினியும், கமலும் சேர்ந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படம் முடிந்ததும், நெல்சனுடன் மூன்றாம் முறையாக ரஜினி இணையும் படம் தொடங்கும்.
– பாப்பாங்குளம் பாரதி.