Take a fresh look at your lifestyle.

சூர்யாவுக்கு ஜோடியாகும் நஸ்ரியா!

86

நடிகர் சூர்யா ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட் அட்லுரி இயக்கத்தில் நடித்து வருகிறார். சூர்யா – 46 ஆக உருவாகும் இப்படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது.

சூர்யா அடுத்ததாக ‘ஆவேஷம்’ பட இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

இந்தப் படத்தில் சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகவுள்ளன. இக்கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.

இப்படத்திற்கு பிரபல மலையாள இசையமைப்பாளர் சுஷின் ஷியாம் இசையமைக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்தப் படத்தின் நாயகியாக நடிகை நஸ்ரியா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.