Take a fresh look at your lifestyle.

‘கூலி’ படத்தில் நடிக்க மறுத்த நாகர்ஜுனா!

சில ஆண்டுக்கு முன்பு வெளிவந்த ரஜினியின் தர்பார், அண்ணாத்தா போன்ற படங்கள் பெரிய வெற்றியை பெறாத நிலையில், கடந்த ஆண்டு நெல்சன் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரஜினிக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. அதோடு, வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

அந்தப் படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘வேட்டையன்’. ஞானவேல் இயக்கும் இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், மஞ்சு வாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் படம், ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார். இதில் ஸ்ருதிஹாசன் ரஜினியின் மகளாக நடிக்கிறார்.

சத்யராஜ், ஷோபனா, சவுபின் சாகிர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் தெலுங்கு ஹீரோ நாகர்ஜுனா ரஜினிக்கு வில்லனாக நடிக்க இருப்பதாகக் கூறப்பட்டது.

ஆனால் அவர் வில்லனாக நடிக்க தனக்கு விருப்பம் இல்லை என்று மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ரஜினிக்கு வில்லனாக நடிக்க வேறு இந்தி மற்றும் தென்னிந்திய ஹீரோக்கள் சிலரிடம் படக்குழு பேசி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.