தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக உயர்ந்து வரும் நடிகர் விஜய்சேதுபதி கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் நடித்து வருகிறார்.
2021-ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த ‘மாஸ்டர்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமானார் விஜய் சேதுபதி.
இந்தப் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த விஜய் சேதுபதி பெரிய அளவில் பேசபட்டார். இவருக்கு வில்லன் வேடமும் பொருந்தி விட்டது.
இதைத் தொடர்ந்து சில படங்களில் வில்லன் வேடங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளிவந்த ‘விடுதலை’ படத்தில் வில்லனாகவும் தோன்றிருப்பார் விஜய்சேதுபதி. இதில் சூரியின் நடிப்பும் விஜய் சேதுபதியின் நடிப்பும் ரசிகர்களிடையே மிகவும் பேசப்பட்டது.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் வெளிவந்த ‘மகாராஜா’ திரைப்படம் நல்ல வசூல் குவித்தது மட்டுமல்லாமல் விமர்சன மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.
இதையடுத்து விடுதலை 2-ம் பாகத்திலும் நடித்து முடித்துள்ளார். தற்போது மிஷ்கின் இயக்கும் ட்ரெயின் படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நாயகனாக நடிக்க விஜய்சேதுபதியை ஒப்பந்தம் செய்துள்ளனர். இதில் நாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார்.
இந்தப் படத்தில் விஜய்சேதுபதிக்கு வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார் என எதிர்பார்ப்பு கிளம்பி உள்ளது.
இந்தப் படம் பக்க கமர்ஷியல் படமாக உருவாகிறது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.