Take a fresh look at your lifestyle.

ஹீரோவாகும் இசையமைப்பாளர் தேவிஸ்ரீபிரசாத்!

44

இசை அமைப்பாளரும், பாடகருமான தேவிஸ்ரீ பிரசாத், தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

வேணு எல்டண்டி இயக்கும் இந்தப் படத்துக்கு ‘எல்லம்மா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

இப்படத்தில் நடிக்கும்படி பல்வேறு முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது.

நிதின், நானி, சர்வானந்த், பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஆகியோரிடம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக இருந்தாலும், எந்தவொரு பணியும் படப்பிடிப்புக்கான கட்டத்தை நோக்கி நகரவில்லை.

எனவே, ‘எல்லம்மா’ படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் ஹீரோவாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவர் முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் கூறப்படுகிறது.