திரைத் தெறிப்புகள் – 78 :
*
மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில் 1956-ல் வெளிவந்து சிறப்பானதொரு வெற்றியைப் பெற்ற திரைப்படம் ‘அலிபாபாவும் 40 திருடர்களும்’.
இந்தத் திரைப்படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரும், பானுமதியும் நடித்த இந்தப் பாடல் காட்சி மிகவும் பிரபலம்.
இப்பாடலைப் பாடியவர்கள் ஏ.எம். ராஜாவும், பானுமதியும்.
ஏ.எம். ராஜாவின் குரல், இந்தப் பாடல் காட்சியில் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பொருந்தியதைப் போலிருக்கும்.
“மாசிலா உண்மைக் காதலே!
மாறுமோ செல்வம் வந்த போதிலே.
பேசும் வார்த்தை உண்மைதானா?
பேதையை ஏய்க்க நீங்கள் போடும் வேஷமா….”
பானுமதியின் குரலும், இந்தப் பாடல் காட்சியில் அவரது நடிப்பும் அருமையாக அமைந்திருக்கும்.
கேட்பதற்கு இனிமையாக இருக்கும் இந்தப் பாடலுக்கு இசையமைத்தவர் பழம்பெரும் இசையமைப்பாளரான தட்சிணாமூர்த்தி.
இப்பாடலை எழுதியவர் கவிஞர் ஏ. மருதகாசி.
“கண்ணிலே மின்னும் காதலை
கண்டுமா, சந்தேகம் எந்தன் மீதிலே.
நெஞ்சிலே நீங்கிடாது கொஞ்சும் இன்பமே.
நிலைக்குமா இந்த எண்ணம் எந்த நாளுமே…”
கருப்பு – வெள்ளையாக திரைப்படம் வந்து கொண்டிருந்த காலத்தில் வித்தியாசமான ஒற்றை வண்ண நிறத்தில் வெளிவந்திருந்த இந்தத் திரைப்படத்தில் எம்.ஜி.ஆரும், பானுமதியும் நடித்திருக்கும் நடன அசைவுகள் பார்ப்பதற்கு ரம்மியமாக அமைந்திருக்கும்.
பாடல் வரிகளும் மிக எளிமையாக அமைந்திருக்கும்.
“உந்தன் ரூபமே உள்ளம் தன்னில் வாழுதே.
இனிய சொல்லினால் எனது உள்ளம் மகிழுதே.
அன்பினாலே ஒன்று சேர்ந்தோம்.
இங்கு நாம் இன்ப வாழ்வின் எல்லைக் காணுவோம்.”
என்று மாறி மாறி ஏ.எம். ராஜாவின் குரலும், பானுமதியின் குரலும் ஒன்று சேர்ந்து ஒலிக்கும் இந்தப் பாடலை ஒரு முறை கேட்டுப் பாருங்கள்.
அந்த மெட்டும், குரல் இனிமையும், மீண்டும் ஒருமுறை கேட்கத் தூண்டும்.
*
-மணா.
*
#அலிபாபாவும்_40_திருடர்களும் #Alibabavum_40_thirudargalum #மக்கள்_திலகம்_எம்ஜிஆர் #Makkal_thilagam_Mgr #Mgr #ஏஎம்_ராஜா #AM_Rajah #பானுமதி #Banumathi #இசையமைப்பாளர்_தட்சிணாமூர்த்தி #Music_director_Dakshinamoorthy #கவிஞர்_ஏ_மருதகாசி #Kavignar_A_Marudakasi #மாசிலா_உண்மைக்_காதலே_பாடல்_வரிகள் #Maasilaa_unmai_kaadhalae_song_lyrics