‘லால் சலாம்’, ‘வேட்டையன்’ படங்களுக்குப் பிறகு ரஜினிகாந்த் நடித்துள்ள படம் ‘கூலி’. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, ஸ்ருதி ஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அடுத்த மாதம் 14 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம்தான் ஊடகங்களுக்கு கொஞ்ச நாட்களாக தீனி போட்டுக்கொண்டிருக்கிறது.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள ‘கூலி’ படத்தின் பட்ஜெட் ரூ. 350 கோடி. ரஜினிக்கு 260 கோடி ரூபாயும், லோகேஷுக்கு 50 கோடியும் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல் கோடம்பாக்கத்தில் பிரளயத்தை உருவாக்கியுள்ளது.
இது குறித்து லோகேஷ் கனகராஜ் மனம் திறந்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “கூலி படத்துக்கு நான் 50 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியது உண்மைதான். இதில் மறைப்பதற்கு ஒன்றும் இல்லை. இதற்கு முன் நான் இயக்கிய ‘லியோ’ ரூ. 600 கோடி வசூலித்துள்ளது.
அந்தப் படத்துக்கு வாங்கிய ஊதியத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு சம்பளம் ‘கூலி’க்கு பெற்றுள்ளேன்.
கூலி படத்துக்காக நான் இரண்டு ஆண்டுகள் உழைத்தேன். நான் வாங்கிய சம்பளத்தில் வருமான வரி கட்ட வேண்டும். என் நண்பர்களுக்கு உதவுவேன். சூப்பர் ஸ்டார் ரஜினி, இந்த படத்துக்கு வாங்கிய சம்பளம் குறித்து எனக்குத் தெரியாது” என்றார் லோகேஷ்.
– பாப்பாங்குளம் பாரதி.