Take a fresh look at your lifestyle.

விரைவில் வெளியாகிறது ’கும்கி-2’!

27

பிரபு சாலமன் இயக்கத்தில் 2012ல் வெளியான படம் ‘கும்கி’. விக்ரம் பிரபுவின் அறிமுகப் படமான ‘கும்கி’ அவருக்கு மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுத்தந்தது.

வசூல் ரீதியிலும் இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. டி.இமான் இசையமைத்திருந்த இந்தப் படம் தமிழகம் முழுக்கப் பரவலாக கவனம் குவித்தது.

‘கும்கி’ படம் வெளியாகி 13 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது, ‘கும்கி 2′ தயாராகி வருகிறது. இந்தப் படத்தையும் இயக்குநர் பிரபுசாலமனே இயக்கியுள்ளார்.

ஒளிப்பதிவாளர் சுகுமாரே இப்படத்திற்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் பென் ஸ்டுடியோஸ் சார்பில் தவால் கடா தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. நேற்று இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்ட நிலையில், இன்று இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

‘கும்கி’ முதல் பாகத்தில் வளர்ந்த யானை வந்தது போல, ‘கும்கி’ இரண்டில் சின்ன யானையை (baby elephant) மையமாக வைத்து படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்தின் நாயகன், நாயகி, மற்ற தொழில்நுட்பக் கலைஞர் யார் யார் என்பதெல்லாம் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.