Take a fresh look at your lifestyle.

இயக்குநராக அறிமுகமாகும் கென் கருணாஸ்!

45

தமிழ்த் திரையுலகில் பன்முக ஆளுமை கொண்ட கலைஞர்களான கருணாஸ் – கிரேஸ் கருணாஸ் தம்பதிகளின் வாரிசும், ‘அசுரன்’ படத்தின் மூலமாக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரபல நடிகர் கென் கருணாஸ் கதையின் நாயகனாக அறிமுகமாகும் பெயரிடப்படாத திரைப்படத்தின் தொடக்க விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த விழாவில் தமிழ்த் திரையுலகத்தை சார்ந்த முன்னணிப் பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கென் கருணாஸ் இயக்குநராக அறிமுகமாகும் பெயரிடப்படாத இந்த திரைப்படத்தில் கென் கருணாஸ், அனிஸ்மா அணில் குமார், மீனாட்சி தினேஷ், பிரியான்ஷி யாதவ், சுராஜ் வெஞ்சரமூடு, தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேசிய விருதினை வென்ற ‘இசை அசுரன்’ ஜீ.வி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

படத்தொகுப்பு பணிகளை நாஷ் மேற்கொள்ள, கலை இயக்கத்தை ராமு தங்கராஜ் கவனிக்கிறார்.

தமிழின் முன்னணி நட்சத்திர நடிகரான தனுசின் பிரத்யேக உடை அலங்கார நிபுணரான காவ்யா ஸ்ரீராம் இப்படத்திற்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

பள்ளிக்கூட பின்னணியில் கலகலப்பான படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை பார்வதா என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்ட்ரீட் பாய் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில்,

தயாரிப்பாளர்கள் கருப்பையா சி. ராம் – காளி ராஜ்குமார் – சுலோச்சனா குமார் ஆகியோர் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தின் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான கார்த்தி, விஷால், இயக்குநர் வெற்றிமாறன்,

நடிகரும் இயக்குநருமான ஆர்.ஜே. பாலாஜி, தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ். தாணு, டாக்டர் ஐசரி கே. கணேஷ், அருண் உள்ளிட்ட பலர் நேரில் வருகை தந்து படக் குழுவினரை வாழ்த்தினர்.

‘அசுரன்’, ‘வாத்தி’, ‘விடுதலை 2’ ஆகிய படங்களின் மூலம் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த நடிகர் கென் கருணாஸ் முதல் முறையாக கதையின் நாயகனாக நடிப்பதுடன் இப்படத்தை இயக்குவதால், படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு  பன்மடங்கு அதிகரித்துள்ளது.