Take a fresh look at your lifestyle.

முதன் முறையாக விஜய்க்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்!

80

தெலுங்கில் பிரபலமான சினிமா நிறுவனம் தில் ராஜுவின் ‘ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ்’.

விஜய் தேவரகொண்டா ஹீரோவாக நடித்த ‘கிங்டம்’ படத்தைத் தயாரித்த இந்த நிறுவனம், அவரை நாயகனாக வைத்து மீண்டும் படம் தயாரிக்கிறது. ‘எஸ்விசி-59’ என தற்காலிகமாக படத்துக்கு டைட்டில் வைக்கப்பட்டிருந்தது.

இந்தப் படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். இவர்கள் இருவரும் இதற்கு முன்பு சில படங்களில் நடித்துள்ளனர். ஆனால், ஜோடியாக நடிப்பது இதுவே முதன் முறை.

‘ராஜா வாரு ராணிகாரு’ படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த ரவி கிரண் கோலா, இந்தப் படத்தை இயக்குகிறார்.

இதன் தொடக்க விழா ஐதராபாத்தில் நடந்தது. விஜய் தேவரகொண்டா, கீர்த்தி சுரேஷ், தில் ராஜு உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

‘ரவுடி ஜனார்த்தன்’ என இந்தப் படத்துக்கு பெயர் வைக்கப்பட்டுள்ளதாக, பட பூஜையில் தெரிவிக்கப்பட்டது. இது ஆக்ஷ்ன் படம். மலையாள இசையமைப்பாளர் கிறிஸ்டோ சேவியர் இசை அமைக்கிறார் .

மும்பையில் வரும் 16 ஆம் தேதி ‘ஷுட்டிங்’ தொடங்குகிறது.

– பாப்பாங்குளம் பாரதி.