சந்துரு இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பேஷன் ஸ்டூடியோஸ் மற்றும் தி ரூட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ரிவால்வர் ரீட்டா’.
கீர்த்தி சுரேஷின் பிறந்த நாளான நேற்று (அக்டோபர் – 17) இந்தப் படத்தின் டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ்யுடன் சுனில், அஜய் கோஷ், ஜான் விஜய், ரெடின் கிங்ஸ்லி, சுரேஷ் சக்கரவர்த்தி, பிளேடு சங்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.
தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டைட்டில் டீசரில், காய்கறி கடையில் நின்றிருக்கும் கீர்த்தி சுரேஷின் ஹேண்ட் பேக் கொள்ளையடிக்கப்படுகிறது.

ஹேண்ட் பேக்கை திறந்து பார்க்கும் கொள்ளையர்கள் அதில், கத்தியும், துப்பாக்கியும், வெடிகுண்டும் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைகின்றனர்.
அடுத்தக் காட்சியில் கொள்ளையர்கள் இருக்கும் இடத்தில் மாஸாக என்ட்ரி கொடுக்கிறார் கீர்த்தி.
தன்னுடைய பொருட்களை திரும்ப பெறும் அவரிடம், ‘நீங்கள் போலீஸா?’, ‘ரா ஏஜென்டா’, ‘டான் ஆ’ என கேட்கின்றனர். எல்லாவற்றையும் இல்லை என மறுக்கிறார் கீர்த்தி.
இடையில் அவர் சண்டையிடும் காட்சிகள் வந்து செல்கின்றன. மொத்தமாக படம் கீர்த்தி சுரேஷின் ஆக்ஷன் பக்கத்தை காட்டும் என்பதை இந்த படத்தின் டைட்டில் டீசர் உணர்த்துகிறது.