திரைத் தெறிப்புகள்-12:
தமிழில் அந்தக் காலத்தில் வெளிவந்த சில திரைப்படங்களைப் பார்க்கும்போது நமக்கு வியப்பாக இருக்கும். அப்படிப் பார்வையாளர்களிடம் பெரும் வியப்பை ஏற்படுத்திய படங்களில் ஒன்று 1968-ம் ஆண்டில் வெளியான ‘துலாபாரம்’.
‘ஊர்வசி’ விருது வாங்கிய அற்புதமான நடிகையான சாரதா, ஏ.வி.எம். ராஜன் உள்ளிட்ட பலரும் சிறப்பாக நடித்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
குறிப்பாக ஜேசுதாஸ் மனம் உருகிப் பாடி இருக்கும் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் யாரும் லேசில் மறக்க முடியாது.
கவித்துவமும் வாழ்வின் புதிர்த் தன்மையும் வெளிப்படும்படியாக அமைந்த இந்தப் பாடலை அருமையாக எழுதியிருப்பார் கவியரசு கண்ணதாசன்.
“காற்றினிலே பெரும் காற்றினிலே
ஏற்றிவைத்த தீபத்திலும் இருள் இருக்கும்….”
– என்று துவங்கும் பாடல்….
“காலம் எனும் கடலிலே சொர்கமும் நரகமும்,
அக்கரையோ இக்கரையோ?
என்று நகரும் பாடலில் அடுத்து இடம் பெற்றிருக்கும் இந்த மகத்தான வரிகள்.
“ஆண்டவனும் கோவிலில் தூங்கிவிடும் போது,
யாரிடத்தில் கேள்வி கேட்பது?
ஏழைகளின் ஆசையும் கோவில் மணி ஓசையும்,
வேறுபட்டால் என்ன செய்வது?
தர்மமே மாறுபட்டால் என்ன செய்வது?”
-இந்தப் பாடலை ஜேசுதாஸின் இனிமையான மெழுகுக் குரலில் கேட்கும்போது
நம் மனதில் துக்கத்தின் நிழல் படிந்திருக்கும்.
“ஆடுவது நாடகம்; ஆளுக்கொரு பாத்திரம்,
இறைவனுக்கு வேஷமென்னவோ?”
– என்று வாழ்வின் அர்த்தம் பற்றிப் பல எளிய கேள்விகளைக் கவித்துவமான மொழியில் எழுப்பி இருப்பார் கண்ணதாசன்.
‘துலாபாரம்’ படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடல் காட்சிகளைப் பார்ப்பவர்கள், சாரதா மற்றும் ஏவிஎம் ராஜனின் அருமையான நடிப்பையும், ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட்டின் இயக்கத்தில் கருப்பு வெள்ளையில் உருவான அற்புதமான காட்சிப் பதிவுகளையும் ஒருசேர அனுபவிக்கலாம்.
#கவியரசு_கண்ணதாசன் #Kaviyarasu_Kannadasan #ஜேசுதாஸ் #Jesudoss #துலாபாரம் #Thulabaaram #சாரதா #Saradha #ஏவிஎம்_ராஜன் #AVM_Rajan #இயக்குநர்_ஏ_வின்சென்ட் #Director_A_Vincent #காற்றினிலே_பெரும்_காற்றினிலே #Katrinile_perum_katrinile_song_lyrics