ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது ‘ஹபீபி’ திரைப்படம்.
வலுவான கதை சொல்லல், ஆழமான உணர்வுகள் மற்றும் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட கதைக்களத்தோடு மறக்க முடியாத சினிமா அனுபவத்தையும், மொழிகளை தாண்டி பல தரப்பட்ட ரசிகர்களையும் ஈர்க்கும் படமாகவும் இது உருவாகி வருகிறது.
‘ஹபீபி’ திரைப்படத்தில், திரைத்துறையில் அனுபவம்மிக்க இயக்குநர் கஸ்தூரி ராஜா இணைந்திருப்பது படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியுள்ளது.
அவரது நீண்டகால அனுபவமும், வழிகாட்டுதலும் ஆதரவும் இந்தப் படத்தை மேலும் செழுமைபடுத்தியுள்ளதோடு படக்குழுவினருக்கும் பெரும் பலமாக மாறியுள்ளது.
படத்தில் தனது பங்களிப்பு குறித்துப் பேசிய கஸ்தூரி ராஜா:
“ஒரு நல்ல கதை எப்போதும் தனது பார்வையாளர்களைக் கண்டடையும் என்று நான் நம்புகிறேன். இந்த திரைப்படத்தில் அந்த உண்மைத் தன்மை உள்ளது” என்றார்.
இயக்குநர் மீரா கதிரவன் :

“மத வேறுபாடுகளைத் தாண்டி சமூகத்தில் மூத்தவர்களுக்கு நாம் அளிக்கும் மரியாதையை அவரது கதாபாத்திரம் இந்தப் படத்தில் பிரதிபலிக்கும்.
ஒற்றுமை, கண்ணியம் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் கொண்டதாகவும் அவரது இருப்பு இருக்கும்.
திரைத்துறையிலும் வயதிலும் அவர் மூத்தவராக இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் எங்கள் அனைவருடனும் மிக எளிமையாக பழகினார்” என்றார்.
இந்தத் திரைப்படத்தை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்கிறது. தரமான மற்றும் கருத்துள்ள படங்களை ஆதரித்து வரும் இந்த நிறுவனம்,
திறமையான விளம்பரம், மார்க்கெட்டிங் மற்றும் விநியோகத்தின் மூலம் நல்ல திரைப்படங்களை அதிக பார்வையாளர்களிடம் கொண்டு செல்லும் வலுவான தளமாக திகழ்கிறது.
கலை நேர்மை மற்றும் வணிக நுணுக்கம் ஆகியவற்றின் பிரதிபலிப்பாக ’ஹபீபி’ திரைப்படம் இருக்கும்.
இன்றைய மாறிவரும் சினிமா உலகில் படைப்பாற்றல், அனுபவமிக்க வழிகாட்டுதல் மற்றும் வலுவான விநியோக ஆதரவு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்தப் படம் உணர்த்தும்.
நீண்ட நாட்களுக்கு ரசிகர்கள் மனதில் இந்தப் படம் நீங்கா இடம் பிடிக்கும்.
‘ஹபீபி’ வெறும் திரைப்படம் மட்டுமல்ல. ஆர்வம், ஒற்றுமை மற்றும் வலுவான கதை சொல்லலுடன் உருவான மிகச்சிறந்த அனுபவம்.