சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘கங்குவா’ திரைப்படம் கடந்த நவம்பர் 14-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
இதில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்தப் படத்தை ஞானவேல் ராஜா, தனது ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.
சரித்திர படமாக உருவாகி இருந்த இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
3டி தொழில்நுட்பத்தில் பான் இந்தியா முறையில் வெளியான இந்தப் ‘கங்குவா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றன. 350 கோடி ரூபாயில் உருவான இப்படம் உலகளவில் ரூ.127 கோடி வசூலித்தது.
வியாபார ரீதியாக பெரிய வெற்றியைப் பெறாமல் படக்குழுவினருக்கு ஏமாற்றத்தை அளித்தது.
இந்நிலையில் ‘கங்குவா’ படத்தை ஆஸ்கார் போட்டிக்கு அனுப்பி இருந்த நிலையில், இந்தப் படம் ஆஸ்கர் போட்டிக்கு பரிந்துரைக்கப்படும் படங்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.
ஆஸ்கர் விருது விழா வரும் மார்ச் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்த விருதுக்குத் தகுதியானதாக 323 திரைப்படங்களின் பட்டியல், தற்போது ஆஸ்கார் அகாடமி வெளியிட்டுள்ளது.
இதில் சிறந்த படத்துக்கான போட்டியிடும் 207 படங்களில், 7 இந்தியப் படங்களும் இடம்பிடித்துள்ளது.
(தமிழ்) கங்குவா, (மலையாளம்) ஆடு ஜீவிதம் சந்தோஷ், (இந்தி) ஸ்வதந்ரிய வீர் சாவர்கர், (மலையாளம்) ஆல் வி இமேஜின் அஸ் லைட், கேர்ஸ் வில் பி கேர்ள்ஸ் (இந்தி – ஆங்கிலம்) உள்ளிட்ட படங்கள் இடம் பிடித்துள்ளன.