பேசும் படம் :
பாடும்போது அவ்வளவு உச்சகட்டமான குரல் வளம். அநாயசமான ராகக் குழைவுகள்.
உச்சரிப்பில் அவ்வளவு துல்லியம் என்றிருந்தவர் மூத்த நடிகையும்,பாடகியுமான கே.பி.சுந்தராம்பாள்.
கொடுமுடியில் சொந்தமாகத் தியேட்டரைக் கட்டினார் அவர்.
அதன் திறப்புவிழாவுக்கு எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா என்று மூன்று பேருமே சென்றிருந்தார்கள்.
கணீர்க்குரல் கொண்ட கே.பி.எஸ். மீது அன்பும், மதிப்பும் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
குறிப்பு : எம்.ஜி.ஆருடன் கே.பி.எஸ் எடுத்துக்கொண்ட புகைப்படம்.