1988, மார்ச் 19 ஆம் தேதி ஜானகி அம்மாவுக்கு மறக்க முடியாத நாள். அன்று தான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு அறிவிக்கப்பட்ட ‘பாரத ரத்னா’ விருதைக் குடியரசுத் தலைவரிடம் இருந்து பெற்றுக் கொண்டார் ஜானகி அம்மா.
“கைகள் நடுங்க, கண்களில் நீர்க் கசிய, அன்றைய குடியரசுத் தலைவர் இரா. வெங்கட்ராமனிடமிருந்து பாரத ரத்னா விருதைப் பெறுகிறபோது, எனக்கு ஏற்பட்ட உணர்வைச் சொல்வதற்கு வார்த்தை இல்லை” என்று நெகிழ்ந்திருக்கிறார் ஜானகி அம்மையார்.
-தாய் வெளியீடாக வந்த ‘அன்னை ஜானகி – 100’ என்ற நூற்றாண்டு மலரிலிருந்து.