தவெக தலைவர் விஜய் நடித்துள்ள படம் ‘ஜன நாயகன்’. இது அவருக்கு கடைசி படம். எச்.வினோத் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மமிதா பைஜு, பூஜா ஹெக்டே, பாபி தியோல், நாசர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
அனிருத் இசை அமைத்துள்ள இந்தப் படம் பொங்கல் திருநாளை முன்னிட்டு வரும் 9 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது.
அண்மையில் மலேஷியாவில் நடைபெற்ற இதன் இசை வெளியீட்டு விழாவில் 80 ஆயிரம் பேர் கலந்து கொண்டது பெரும் சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
படத்துக்கு யு|ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா ஆகிய மாநிலங்களில் படத்தின் முன்பதிவு தொடங்கவில்லை. ஆனால், கர்நாடாகாவில் முன்பதிவு ஆரம்பமாகிவிட்டது.

பெங்களூருவில் ‘ஜன நாயகன்’ படத்தை, காலை 6.30 மணிக்கு திரையிட அந்த மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
முதல் நாள் முதல் காட்சியில் படத்தைப் பார்க்க அதிகபட்சமாக 2 ஆயிரம் ரூபாய்க்கு டிக்கெட் கட்டணம் நிர்ணயித்துள்ளனர்.
விலையை பொருட்படுத்தாமல் ரூ.2 ஆயிரம் கொடுத்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கி செல்கிறார்கள்.
– பாப்பாங்குளம் பாரதி.