Take a fresh look at your lifestyle.

தொடங்கியது இந்தியன்-2 டப்பிங் பணிகள்!

ஷங்கர் – கமலஹாசன் கூட்டணியில் லைகா தயாரிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.

காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், சித்தார்த், ப்ரியா பவானி சங்கர், விவேக், எஸ்.ஜே.சூர்யா, மனோபாலா, நெடுமுடி வேணு, டெல்லி கணேஷ், பாபி சிம்ஹா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

ஒருபுறம் படத்தின் இறுதிக் கட்டப் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் மறுபுறம் படத்திற்கான டப்பிங் பணிகளையும் படக்குழு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக க்ளிம்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு டப்பிங் பணிகளை தொடங்கியதாக அறிவித்துள்ளது.

இந்தியன்-2 திரைப்படம் அடுத்த ஆண்டு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

– தேஜேஷ்