தனுஷ் ஹீரோவாக நடித்து இயக்கியுள்ள படம் ‘இட்லி கடை’. அவருடன் நித்யா மேனன், அருண் விஜய், சத்யராஜ், ஷாலினி பாண்டே, ராஜ்கிரண் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார்.
உலகம் முழுவதும் இந்தப் படம் கடந்த 1 ஆம் தேதி ஆயுதபூஜை தினத்தன்று ரிலீஸ் ஆனது. கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ள இந்தப் படம் வசூலில் குறை வைக்கவில்லை.
இந்தியா முழுக்க முதல் நாளில் 11 கோடி ரூபாய் வசூலித்த ‘இட்லி கடை’ நேற்று 10 கோடி வசூல் செய்துள்ளது.
இரண்டு நாட்களில் ரூ. 21 கோடி வசூலித்துள்ளது.
அரசு அலுவலகங்களுக்கு இன்று முதல் மூன்று நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் முதல் வாரத்திலேயே தனுஷ் படம், 50 கோடி ரூபாய் வசூலைக் கடந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
– பாப்பாங்குளம் பாரதி.