தொடர்ச்சியாக வெற்றிகளைக் கொடுத்து வரும் பிரதீப் ரங்கநாதன், ஹீரோவாக நடித்துள்ள படம் ‘டியூட்’. அவருக்கு ஜோடியாக மமீதா பைஜு நடித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் கீர்த்தி வாசன் இயக்கிய இந்தப் படத்தைத் தெலுங்கில் நம்பர் ஒன் படத் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸ் ஆனது. உலகம் முழுவதும் 550 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
விமர்சனங்கள் கலவையாக இருந்தாலும் வசூலை அள்ளி வருகிறது, டியூட். வெளியான முதல் நாளில் இருந்து சராசரியாக தினம்தோறும் 10 கோடி ரூபாய் வசூல் செய்து வருகிறது.
கடந்த 5 நாட்களில் 50 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளது. தமிழகம் முழுவதும் இப்போது கனமழை பெய்து வருவதால் வசூல் தற்போது குறைந்துள்ளது.
எனினும் இந்த வார இறுதிக்குள் ரூ. 75 கோடி வசூலை எட்டி விடும் என்கிறார்கள் படக்குழுவினர்.
– பாப்பாங்குளம் பாரதி.