தமிழில் ‘டெக்ஸ்டர்’ என்ற பெயரில் புதிய படம் தயாராகி உள்ளது. இதில் கதாநாயகனாக ராஜு கோவிந்த், நாயகியாக யுக்தா பிரேமி நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை சூரியன் ஜி இயக்கி உள்ளார். பிரகாஷ் எஸ்.வி. தயாரித்துள்ளார்.
பட நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர்கள் சங்கத் தலைவர் ஆர்.வி.உதயகுமார், “சிறிய படங்கள் நன்றாக ஓடுகிறது. அதில் நல்ல கதை இருக்கிறது. ஆனால் சமீபகாலமாக பெரிய படங்கள் வெற்றி பெறுவது இல்லை. காரணம் அதில் நடிகர்கள் மட்டும்தான் இருக்கிறார்கள்.
கதை இல்லை. நாங்கள் இருப்பதை வைத்து சிறப்பான படம் எடுத்தோம். இப்போது பல கேமராக்களை வைத்துக்கொண்டு கதை இல்லாமல் படம் எடுக்கிறார்கள். தெளிவான திரைக்கதை இருக்கும் படங்களே வெற்றி பெறும்.
மூன்று கேமரா வைத்து படம் எடுப்பவர்தான் சிறந்த இயக்குநர் என்று நடிகர்கள் தவறாக நினைக்கிறார்கள். ஒரு கேமரா வைத்து சரியாக படம் எடுப்பவன்தான் சிறந்த இயக்குநர்.
‘டெக்ஸ்டர்’ படம் நன்றாக இருக்கும் என்பதை டிரெய்லர் நிரூபித்து உள்ளது. இன்று படம் எடுப்பது சுலபம். அதை மக்களிடம் கொண்டு செல்வதுதான் சிரமம். தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்று சொல்லக்கூடாது. படம் வெற்றி பெற்றால் தியேட்டர்கள் அதிகரிக்கும்” என்றார்.
நன்றி: தினந்தந்தி.