Take a fresh look at your lifestyle.

எங்கள் படங்களால்தான் சினிமா சீரழிகிறதா?

இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்

68

பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வந்தது.

இந்தப் படம் பரவலான பாராட்டுகளும், வரவேற்பும் பெற்று ஓடிக் கொண்டிருக்கும் ‘பைசன்’ படத்தின் வெற்றியைப் படக்குழுவினர் சென்னையில் கொண்டாடினார்கள்.

இந்த நிகழ்ச்சியின்போது பேசிய இயக்குனர் பா.ரஞ்சித், “ஒரு படத்தின் மூலம் சமூகத்திற்கு தவறான கருத்தை நாம் சொல்ல போவது கிடையாது. 75 ஆண்டுகளாக சினிமா வரலாற்றில் பேசப்படாத மக்களை பற்றி பேசப் போகிறோம். நாம் சரியான வேலையை செய்யும்போது நமக்கு எதற்காக பதற்றம் வருகிறது என்று தெரியவில்லை.

எனது ‘அட்டகத்தி’ படத்தை காமெடியாக பார்த்தவர்கள், ‘மெட்ராஸ்’ படத்தில் இருந்து தான் சில குறியீடுகளைப் பற்றி விமர்சித்தார்கள். மெட்ராஸ் திரைப்படம் வெற்றி பெற்றாலும் கூட, எப்படி ஒருவர் மெட்ராஸ் என்ற பெயரில் படம் எடுக்கலாம் என விமர்சனங்கள் எழுந்தது.

மெட்ராஸ்னு ஒரு படத்தை நான் எடுக்கலான, ரஜினிகாந்த் ‘கபாலி’ படத்திற்கு வாய்ப்பு கொடுத்து இருப்பாரான்னு தெரியல. ஆனால் ஒவ்வொரு முறையும் ரஜினியை வைத்து எப்படி இதுபோன்ற வசனங்களை எடுத்தீர்கள்? என்று விமர்சனங்களும், கேள்விகளும் வந்தது.

குறிப்பாக, ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? ரஜினிக்குள் எப்படி சாதியை கொண்டு வரலாம்? என்று விமர்சித்தார்கள். நான் ஒரு சாதி வெறியன் என்றெல்லாம் என்னை பேசினார்கள். அப்போது, இந்த மாதிரியான படங்கள் எடுக்கவே முடியாதா? யாராவது எடுக்க வந்தால் இப்படி ஒரு சிக்கல் வருமா? என பயங்கர விவாதம் நடந்தது.

முன்பெல்லாம் என்னை மட்டும் திட்டுவார்கள். தற்பொழுது அந்த லிஸ்டில் மாரி செல்வராஜும், வெற்றிமாறனும் சேர்ந்துவிட்டார்கள். தற்போது விமர்சனங்களை சமாளிப்பதில் இன்னும் இரண்டு பேர் சேர்ந்து கொண்டதில் மகிழ்ச்சி. எங்கள் மூன்று பேரையும் தமிழ் சினிமாவைச் சீரழிக்கும் இயக்குனர்கள் என்கிறார்கள்.

பைசன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இருந்தாலும், மாரியால் எப்படி இதுபோன்ற தொடர் வெற்றிப் படங்களை கொடுக்க முடிகிறது என்று எனக்கு ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது.

ஒரு வருடத்துக்கு 400 படங்கள் தமிழில் வருகின்றன. நாங்கள் எடுக்கும் படங்கள் தான் சினிமாவைச் சீரழிக்கின்றதா? இதுபோன்ற கேள்விகளுக்கான பதிலை தேடுவதுதான் எங்கள் சினிமா.

‘பைசன்’ படம் வருவதற்கு முன்பாகவே இது சாதி படம் போகாதீங்க. ‘டியூட்’ படத்துக்கு போங்க என்றெல்லாம் வெறுப்புணர்வைப் பரப்பினார்கள். இதை நம்பி ‘டியூட்’ படத்துக்கு போனவர்களை அதன் டைரக்டர் கீர்த்தீஸ்வரன் வச்சு செஞ்சுட்டாருல்ல…” என்றார்.