Take a fresh look at your lifestyle.

பராரி – இருவேறு சமூக மக்களின் வாழ்வியல் கதை!

201

இயக்குநராக அறிமுகமாகும் எழில் பெரியவேடி, இயக்குநர் ராஜுமுருகனிடம் உதவியாளராக இருந்தவர். தற்போது இவர் இயக்கும் புதிய படத்துக்கு ‘பராரி’ என பெயரிட்டுள்ளனர்.

இந்தப் படத்தில் கதாநாயகனாக ஹரி சங்கர் நடித்துள்ளார். இதில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை சங்கீதா கல்யாண்.

இப்படத்தைப் பற்றி பேசிய இயக்குநர், “இது மானுடத்தை பற்றிப் பேசும் கதை. திருவண்ணாமலை பகுதியில் ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு சமூக மக்கள் பற்றியக் கதையே இந்தப் படம்.

இரு தரப்பினருமே தினக்கூலிகளாக உள்ளனர். ஆனால் அவர்களுக்குள் வேற்றுமை எப்படி வந்தது என்பதையும், அதில் இருக்கும் அரசியலையும் பேசும் படம்.

தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்து வெளி மாநிலத்துக்கு செல்பவர்கள் அங்கு எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதும், படத்தில் இருக்கும். சக மனிதனை நேசிக்க வேண்டும் என்ற கருத்தும் படத்தில் சொல்லப்பட்டு உள்ளது.

இரு சமூக மக்களிடையே உள்ள சாதி அரசியலை பேசும் படமாக இருக்கும். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது என்றார்.

இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார் மற்றும்  ஒளிப்பதிவு ஸ்ரீதர்.