இயக்குநரும், நடிகருமான சேரன் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடித்து வெளியாகியிருக்கும் திரைப்படம் ‘தமிழ்க்குடிமகன்’. இசக்கி கார்வண்ணன் எழுதி இயக்கியிருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.
இந்த படம் ஓடிடியில் வெளியான நிலையில், இந்த படம் தொடர்பாக ரசிகர் ஒருவர் தனது எக்ஸ் தளத்தில் எழுப்பிய கேள்விக்கு தனது ஆதங்கத்தை இயக்குநரும், நடிகருமான சேரன் கொட்டியுள்ளார்.
இந்த படம் தியேட்டரில் பார்க்க முடியவில்லையே என்ற வருத்தமாக உள்ளது. பெரிய படங்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை இந்த மாதிரியான படங்களுக்கும் கொடுக்க வேண்டும் என அந்த ரசிகர் பதிவிட்டுள்ளார்.
அதற்குப் பதிலளித்துள்ள சேரன், “ஹாஹா… அதுக்கு நம்ம பெரிய வசூல் நாயகனா மாறனும்… இங்கே கதைநாயகனுக்கெல்லாம் கல்லா கட்டும் கூட்டம் வராது தம்பி… சிந்தனை சென்று சேர்கிறதா என பார்ப்போம்… காரில் போனால் என்ன பைக்ல போனா என்ன… போகும் இடம்தான் முக்கியம்…’’ என குறிப்பிட்டுள்ளார்.