நி.எ.எ.கோபம் (neek என்கிறார்கள்) படமாகத்தான் இருக்கும். தானே இயக்குவதில் ஒரு வசதி இருக்கிறது.
உலகத்தில் உள்ள எல்லாப் பெண்களும் தன்னை டேட் பண்ண அழைப்பதுபோல கதையை கற்பனை செய்ய முடிகிறது! எனத் தோன்றியது.
படம் முடிந்து வெளியே வந்த சமயம். இயக்குநர் ஒருவர் அழைத்தார். ‘படம் எப்படி இருக்கு?’ கேட்டார். ‘எனக்கு பிடிச்சிருக்கு. உங்களுக்கு?’ கேட்டேன். ‘எனக்கு வாய்ஸ்தான் பிரச்சனை. தனுஷ் பேசுவது போலவே இருக்கு. ஒருவேளை தனுஷ் டப்பிங் பேசியிருப்பாரோ?’ என்றார்.
எனக்கு குழப்பம். ‘தனுஷுக்கு தனுஷ்தானே பேசமுடியும்!’ என்றேன்.
‘அது தனுஷ் இல்ல. அவங்க அக்கா பையன்! ‘சிரித்தார் இயக்குநர். அதுவரை தனுஷ்தான் நடித்திருக்கிறார் ! என்றே நினைத்திருந்தேன்.
துள்ளுவதோ இளமை தனுஷ் போலவே இருக்கிறார் நாயகன். தமிழ் படம் போலத் தோன்றவில்லை. இந்திப் படம் போல் இருக்கிறது. காதல், கல்யாணம், இவைப் பற்றி, மதம், குடும்பம், கலை, இலக்கியம் போன்றவை உருவாக்கி வைத்திருக்கும் values ஐ குலைத்திருக்கிற படம்.
ஒருமுறைதான் காதல். தாலி கட்டினால் அவ்வளவுதான். இப்படி பல க்ளிஷேக்களை உதறி எறிகிற படம் ‘neek’.
இளைஞர்கள் ரசித்துப் பார்க்கிறார்கள்.
வலிமை என்பது ஒரு பழக்கத்தை பின்தொடர்வதல்ல. வேறுபட்டு விலகி நிற்பதில்தான் இருக்கிறது.
நமது தனிப்பட்ட எண்ணங்களும் உணர்ச்சிகளும் உண்மையில் நம்முடையவை அல்ல. இதை எப்போதோ அரிதாக இதுபோன்ற படங்கள் கண்டுபிடிக்கின்றன.
ஏற்கனவே புழக்கத்தில் இருக்கிற மொழி உருவாக்கியிருக்கும் கருத்துக்கள் அடிப்படையிலேயே நாம் சிந்திக்கிறோம். ஆனால் அவை நமது சமூகத்தால் நமக்குக் கையளிக்கப்பட்டவை.
நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பது, அதன் பழமையைத் பேணுவது அல்லது தொடர்வது ஆகாது. அதைத் தொடர்ந்து புதுப்பிக்கவும் மாற்றவும் வேண்டும்.
‘neek’ காதலை, திருமணத்தை மிக எளிதாக்கி முன் செல்கிறது. இந்தப் படத்தில் வருகிற காதல் உரையாடல்கள் தமிழுக்கு நிச்சயம் புதிதாகத் தோன்றுகிறது. டிராகன் ஒரு கனவை முன்வைக்கிறது. ‘neek’ ஒரு புதுவகை யதார்த்தத்தை முன்வைக்கிறது.
குறிப்பாக படம் முடிகிற இடம். பார்ப்பவர்களின் யூகத்துக்கு விட்டுவிடுகிறார் தனுஷ். கவிதையாக இருக்கிறது. பெயருக்கு முன்னால் poetu ன்னு போட்டு கவியரசுகளை லந்து செய்கிறார் தனுஷ்.
படத்தை இளைஞர்கள் வெகு இயல்பாக தங்களோடு relate செய்வதை பார்க்க முடிந்தது. கலாச்சார அதிர்ச்சியை ஏற்றுக்கொள்ளும் தன்மையை, திறந்த மனதோடு இருப்பதை, தகவமைப்புத் திறனோடு இருப்பதை, புதிய அனுபவங்களைத் தழுவி, தெளிவின்மையுடன் வசதியாக இருப்பதை ‘Neek’ சாதித்திருக்கிறது.
வெவ்வேறு கலாச்சார விதிமுறைகள் மற்றும் நடைமுறைகளைப் புரிந்துகொள்ள முயற்சிக்கும் யாருக்கும், இப்படம் விசித்திரமாகவோ சவாலாகவோ இருக்காது.
தனுஷ் குடும்பத்திலிருந்து இன்னொரு தனுஷ் தேவையில்லை. செல்வராகவன், தனுஷ் போல பவிஷ் தன்னைக் கண்டுபிடிக்க வெகுதூரம் செல்லவேண்டும். ஆனாலும் பையனிடம் நெருப்பு இருக்கிறது.
படத்தில் கவர்கிற இன்னொரு இளைஞர் மாத்யூ தாமஸ். மலையாளத்தில் ரகளைச் செய்தவர். நண்பனின் காதலியை ஒருதலையாக காதலிக்கிற இடங்கள், செம ஃபன். தமிழில் வந்திருக்கிற முதல் ஜென் Z படம். Congrats Danush!
-நன்றி முகநூல் பதிவு.
#பவிஷ் #Pavish #தனுஷ் #Dhanush #மாத்யூ_தாமஸ் #Mathew_thomas #நிலவுக்கு_என்மேல்_என்னடி_கோபம் #Nilavukku_enmel_ennadi_kobam #விமர்சனம் #review #neek