Browsing Category
திரை இசை
எங்கே வாழ்க்கை தொடங்கும், அது எங்கே எவ்விதம் முடியும்?
1962-ம் ஆண்டு வெளிவந்த, இயக்குநர் ஸ்ரீதரின் 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில் இடம்பெற்ற, "நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் தெய்வம் ஏதுமில்லை" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசர் கண்ணதாசன்.
ஆண்டவன் தூங்கிடும்போது யாரிடத்தில் கேள்வி கேட்பது?
-1968-ம் ஆண்டு ஒளிப்பதிவு மேதை ஏ.வின்சென்ட்டின் இயக்கத்தில் கருப்பு வெள்ளையில் உருவான திரைப்படம் 'துலாபாரம்'. இந்தப் படத்தில் இடம்பெற்ற "காற்றினிலே பெரும் காற்றினிலே" என்ற வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது!
1952-ம் ஆண்டு நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளிவந்தது 'பராசக்தி' திரைப்படம். இதில் இடம்பெற்ற "நல்லவரானாலும் இல்லாதவரை நாடு மதிக்காது" என்ற பாடல் வரிகளை எழுதியவர் உடுமலை நாராயண கவி.
பெற்றெடுத்த குழந்தை, தாய்க்குப் பாரமா?
1958-ம் ஆண்டில் வெளிவந்த 'தை பிறந்தால் வழி பிறக்கும்' என்ற படத்தில் கே.வி. மகாதேவன் இசையமைப்பில் பாடகி எம்.எஸ். ராஜேஸ்வரியின் இனிமையான குரலில் "மண்ணுக்கு மரம் பாரமா?" என்ற பாடல் வரிகளை எழுதி இருப்பவர் புதுக்கவிஞர் கே. முத்துசுவாமி.
திண்ணைப் பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும்!
1958-ம் ஆண்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து வெளிவந்த 'பதி பக்தி' படத்தில் "இந்தத்-திண்ணைப் பேச்சு வீரரிடம்-ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி" என்ற முத்தான வரிகளை எழுதி இருப்பவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
பணமே உன்னை எங்கே தேடுவேன்?
1952-ம் ஆண்டு வெளிவந்த என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் சிவாஜி கணேசன் நடிப்பில் 'பணம்' படத்தில் "எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்" என்று துவங்கும் பாடலை எழுதியவர் உடுமலை நாராயணகவி.
கடவுள் ஏன் கல்லானார்…?
1970-ம் ஆண்டு மக்கள் திலகம் நடிப்பில் வெளிவந்த 'என் அண்ணன்' திரைப்படத்தில் "கடவுள் ஏன் கல்லானார்" என்ற பாடல் வரிகளை எழுதியவர் கவியரசு கண்ணதாசன்.
மனிதனாக வாழ்ந்திட வேணும் மனதில் வையடா!
1961-ம் ஆண்டு வெளிவந்த 'அரசிளங்குமரி' திரைப்படத்தில் இடம்பெற்ற வரிகள் இவை. "சின்னப்பயலே சின்னப்பயலே, சேதி கேளடா" என்று துவங்கும் இந்தப் பாடலை எழுதியவர் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்.
யாருக்கும் இங்கே வெட்கமில்லை!
ஊருக்கும் வெட்கமில்லை; இந்த உலகுக்கும் வெட்கமில்லை ; யாருக்கும் வெட்கமில்லை - 1975-ம் ஆண்டு ‘சோ’ நடிப்பில் வெளிவந்த 'யாருக்கும் வெட்கமில்லை' திரைப்படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதியவர் கவிஞர் கண்ணதாசன்.
‘உழைத்து வாழ’ உணர்த்திய கவிஞர்!
1973-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தயாரித்து இயக்கிய 'உலகம் சுற்றும் வாலிபன்' படத்தில் இடம்பெற்ற "உழைத்து வாழ வேண்டும் பிறர் உழைப்பில் வாழந்திடாதே" என்ற பாடல் வரிகளை எழுதியவர் புலமைப் பித்தன்.