ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி – மனம் கவர்ந்த தமிழ்த் திரைப் படம். அவசியம் காண வேண்டிய திரைப்படம்.
ஒரு மந்திரவாதி அனைத்து விதமான சக்திகளையும் பெற தவம் செய்வான். ஆனால், 1000 ஆண்களின் உயிர்த் தியாகத்தால் மட்டுமே அந்த மந்திரவாதியால் அத்தகைய உயர்ந்த சக்தியை பெற முடியும்.
இந்த சாதனையை அவரால் தனியாக செய்ய முடியாது என்பதால் ஒரு திட்டத்தை தீட்டுவார். நீதிகேது என்ற அரசனின் மகளான இளவரசி அபூர்வ சிந்தாமணியை இதற்காக பயன்படுத்திக் கொள்கிறார். அவளின் அறிவுத் திறன் மற்றும் அவளுக்கு பல்வேறு கலைகளில் ஆர்வம் இருந்த காரணத்தால் அவளுக்கு அந்த பெயர் சூட்டப்பட்டது.
இதனால் மகிழ்ச்சி அடைந்த ராஜா அவளை மேலும் படிக்க ஊக்குவித்தார். அந்த மந்திரவாதி துறவி ஆடையில் ஆதித்யபுரி ராஜியத்திற்கு வந்து சிந்தாமணிக்கு ஆசிரியராகிறான்.
படிப்படியாக இளவரசியை தனது கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து அவனது குறிக்கோளை அடையப் பயன்படுத்திக் கொள்கிறான். அவள் திருமண வயதை அடையும்போது அவளுக்கு சமமான மனிதனை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அறிவுறுத்துவான்.
எனவே ஒரு போட்டியை ஏற்பாடு செய்யும்படி அவளிடம் கேட்கிறான். இதன் மூலம் இளவரசியை திருணம் செய்து கொள்ள ஆர்வம் உள்ளவர்களிடம் மூன்று கேள்விகள் கேட்கப்படும். அப்படி அவர்கள் பதில் சொல்லத் தவறினால் அவர்களது தலை துண்டிக்கப்படும் என்ற ஒரு தண்டனையும் அறிவிக்கப்படுகிறது.

அந்த மூன்று கேள்விகளுக்குக்கான பதில் மந்திரவாதிக்கு மட்டுமே தெரிந்திருக்கும்.
அவ்வாறு பதிலளிக்கத் தவறும் 1000 மணமகன்களின் தலைகளை துண்டித்து தனது இலட்சியத்தை அடைந்துவிடலாம் என்ற திட்டத்தை தீட்டியிருப்பான் அந்த மந்திரவாதி.
இந்த கேள்விகள் மற்றவர்களுக்கு தெரிந்துவிடக் கூடாது என்பதற்காகவே அவர்களது தலைகள் துண்டிக்கப்படுகிறது. சிந்தாமணி தனது தந்தையை சமாதானம் செய்து தானும் அந்த போட்டிக்கு சம்மதிக்கிறாள்.
முதலில் அவளது உறவினரான புராந்தரன் என்பவன் அவளை திருமணம் செய்து கொள்ள ஆர்வமாக இருக்கிறான்.
பிறகு அந்த கேள்விகளுக்கு பதில் இல்லாததால் அவனது தலை துண்டிக்கப்படுகிறது.
இதே போல் 999 நபர்களின் தலைகள் துண்டிக்கப்படுகிறது. இதில் இளவரசன் மெய்யழகனின் ஆறு மூத்த சகோதரர்களும் அடங்குவார்கள். இதனால் சிந்தாமணியை பழிவாங்க முடிவு செய்கிறான் அவன்.
அதனால் தனது நண்பரும் உதவியாளருமான காளியுடன் சிந்தாமணியின் ராஜியத்திற்கு வருகிறான். அங்கு செல்வதற்கு முன் அந்த கேள்வி மற்றும் அதற்கான பதிலையும் கண்டுபிடிக்க முடிவு செய்கிறான்.
இவ்வாறு செய்யும்போது இளவரசனுக்கு சிந்தாமணியின் தோழியான இளவரசி செங்கமலத்தின் மேல் காதல் உண்டாகிறது.
அவள் மூலம் அந்த கேள்விகளை கற்றுக் கொள்கிறான். மதிவதனபுரம், சம்பங்கிபுரம் மற்றும் நதிசீலபுரம் ஆகிய நாடுகளுக்கு அந்த கேள்விக்கான விடையைத் தேடி இளவரசன் செல்வான்.
அதனுடன் தொடர்பு உடையவர்களை சிந்தாமணியின் அரண்மனைக்கு அவனுடன் அழைத்து வருகிறான். மேலும் அவர் கேள்விகளுக்கு பதில் அளித்து வெற்றியும் பெறுகிறார்.
மேலும் அந்த மத்திரவாதியின் திட்டத்தையும் அம்பலப்படுத்துகிறார். மேலும் அந்த மந்திரவாதியால் பாதிக்கப்பட்ட மன்னர்களில் ஒருவரால் அந்த மந்திரவாதி கொலை செய்யப்படுகிறான்.
அதோடு, இளவரசி சிந்தாமணியின் மேல் ஆர்வமாக இருக்கும் தனது உறவினரை திருமணம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறான். ஆனால், இளவரசி சிந்தாமணியின் தோழியான இளவரசி செங்கமலத்தை திருமணம் செய்து கொள்கிறார்.
T.R. சுந்தரம் இயக்கித் தயாரித்த ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி படம் 1947-ல் வெளிவந்து பெரு வெற்றிபெற்றது.
இதில், P.S. கோவிந்தன், V.N. ஜானகி மற்றும் காளி N. ரத்தினம், S. வரலக்ஷ்மி, M.G. சக்கரபாணி மற்றும் C.T. ராஜகாந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.