Take a fresh look at your lifestyle.

அதிமுக ஒன்றுபட உதவிய ஜானகி அம்மையார்!

236

ஜெயலலிதாவின் நெகிழ்ச்சியான பேச்சு:

“1989 ஜனவரியில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே நான்கு மாதங்களாகத் தொடர்ந்து நான் மக்களைச் சந்தித்து வந்த நிலையில், தமிழகச் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஐந்து மாதக் காலம் தமிழகம் முழுவதும் பயணம் செய்தேன். தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டேன்.

சேவல் சின்னத்தில் கழக வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள், போடி நாயக்கனூரில் சட்டமன்றத் தொகுதியில் இருந்து வெற்றிபெற்ற எனக்குப் பொது மக்கள் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் எதிரக்கட்சித் தலைவரான முதல் பெண் என்ற பெருமையைத் தந்தார்கள்.

கழகம் போட்டியிட்ட பெரும்பாலான இடங்களில் 500, 1000 என்ற குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியைச் சந்தித்தது. கழகம் 27 இடங்களில் வென்றது. கூட்டணிக் கட்சிகள் 2 இடங்களில் நம் ஆதரவோடு வெற்றி பெற்றன. ஆக, நாம் வென்ற மொத்த இடங்கள் 29.

தேர்தல் முடிவுகளால் ஜானகி அம்மையார் தலைமையை ஏற்றவர்கள் தெளிவு பெற்றனர், இயக்கம் ஒன்றுபட உதவிய அம்மையார் பெருந்தன்மையோடு நடந்து கொண்டார்.

அவருக்குரிய சிறப்பை அளித்து இயக்கத்தை ஒற்றுமைப்படுத்த நான் பெரிதும் முயன்றேன். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் புதுப் பொலிவு பெற்றது.

1989ல், ஜானகி அம்மையாரின் பெருந்தன்மையால் இரண்டு அணிகளும் அதிகாரப்பூர்வமான முறையில் இணைந்துவிட்டதால் இரட்டை இலைச் சின்னம் மீண்டும் கிடைத்தது. பின்னர் நடந்த மதுரை கிழக்கு, மருங்காபுரி சட்டமன்ற இடைத் தேர்தல்களில் கழகம் வெற்றிவாகை சூடியது.

உலகத்திலேயே இப்படிப் பிளவுபட்ட இயக்கம் ஒன்றுபட்டது இதுவரை என்று தான் நினைக்கிறேன். அதன்பின் கழகம் பெற்ற வெற்றிகள் வரலாற்றில் இடம்பிடித்தவை.

-அதிமுக வெள்ளிவிழா மலர், 1997.