ராம் சரணின் ‘ஆர்ஆர்ஆர்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமவுலி இயக்கும் படத்தில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்கிறார். இதுகுறித்து அவர் ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
இது இண்டியானா ஜோன்ஸ் படம் போல ஆக்ஷன் அட்வென்சர் கதையாக இருக்கும் என்றும் மகேஷ்பாபுவின் கேரக்டரை ஹனுமனை நினைவூட்டும் வகையில் வடிவமைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் படப்பிடிப்பு ஆப்பிரிக்கக் காடுகளில் நடக்க இருக்கிறது. இதில் பிருத்விராஜ் மகேஷ்பாபுக்கு வில்லனாக நடிக்கிறார்.
இது வழக்கமான வில்லன் கதாபாத்திரம் போல இருக்காது என்றும் அவர் கதாபாத்திரத்துக்கான நியாயம் கதையில் இருக்கும் என்றும் தெரிகிறது.
இந்தப் படத்தின் பிரீ புரொடக்ஷன் வேலைகள் தொடங்கிவிட்டன. இதில் வெளிநாட்டு நடிகர்களும் நடிக்க இருக்கின்றனர். இந்தப் படம் இந்திய சினிமாவை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் என்கிறார்கள்.
இப்படத்திற்கு #SSMB29 தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டுள்ளது படக்குழு. இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர்களைப் பற்றிய விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.