டெல்லியைப் பூர்வீகமாகக் கொண்ட வசுந்தரா காஷ்யப் ஆரம்பத்தில் மாடலிங் மீது ஆர்வம் கொண்டவராக இருந்தார். பிறகு, மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்று மிஸ் கிரியேட்டிவிட்டி பட்டம் வென்றார்.
அதன் தொடர்ச்சியாக, அவரை, ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தின் மூலம் நடிகையாக அறிமுகம் செய்து வைத்தவர் இயக்குநர் சீனு ராமசாமி தான். இந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார்.
இந்தப் படத்தைத் தொடர்ந்து உன்னாலே உன்னாலே, களைப்பணி, ஜெயம்கொண்டான், பேராண்மை, போராளி, சொன்னா புரியாது, கண்ணே கலைமானே, கண்ணை நம்பாதே, மாடர்ன் லவ் சென்னை என்று பல படங்களில் நடித்தார்.
கடைசியாக கங்குவா படத்திலும் நடித்திருந்தார். ஹோம்லி லுக் கொண்ட வசுந்தரா பெரும்பாலும் கிராமத்துக் கதைகளில் நடித்திருந்தார்.
நடிகையாக மட்டுமில்லாமல் அண்மையில் அவர் எழுத்தாளராகவும் பலரால் பாராட்டப்பட்டார். தி அக்கியூஸ்ட் (The Accused) என்ற பெயரில் ஒரு கிரைம் நாவலை எழுதியுள்ளார்.
இந்த நிலையில், ஒரு புதிய படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதையொட்டி அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் இணையதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
