Take a fresh look at your lifestyle.

திரையுலகில் 28 ஆண்டுகள் நிறைவு செய்யும் சிம்ரன்!

174

90-ஸ் கிட்ஸ் கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். சமீபத்தில் இவரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி, தியாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த ‘அந்தகன்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இதில் சிம்ரனுடைய நடிப்பும் பாராட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிம்ரன் நடிப்பில் உருவாகும் அடுத்த படத்தை அவர் கணவர் தீபக் பஹா தயாரிக்கிறார்.

ஃபோர் டீ மோஷன் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் அவர் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ‘தி லாஸ்ட் ஒன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தின் மூலம் திரைத் துறையில், 28 ஆண்டுகள் நிறைவு செய்ய உள்ளார் நடிகை சிம்ரன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் உருவாகும் இந்தப் படம் லோகேஷ் குமார் இயக்குகிறார்.  

திகில் மற்றும் ஃபேன்டசி படமாக உருவாகும் இதில், இதுவரை தோன்றிடாத வித்தியாசமான கதாபாத்திரத்தில்  நடிக்கிறார்.

சிம்ரனின் திரையுலகப் பயணத்தில் மைல்கல்லாக இருக்கும் என்கிறார்கள் தயாரிப்பாளர்கள். இதில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய விவரங்கள் விரைவில் அதிகாரபூர்வமாக வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.