Take a fresh look at your lifestyle.

சண்டைக் காட்சியில் காயமடைந்த சாக்ஷி அகர்வால்!

நடிகை சாக்ஷி அகர்வால் தற்போது ‘பேடாஸ்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பென்சி புரொடக்ஷன்ஸின் தயாரிப்பில் மலையாளத்தில் வெளியாகவிருக்கும் இந்த அதிரடியான த்ரில்லர் திரைப்படத்திற்காக மிகவும் பயங்கரமான சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.

இந்த சண்டைக் காட்சிகளை சண்டைப் பயிற்சி இயக்குனர் ஃபீனிக்ஸ் பிரபு மேற்கொண்டுள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகள் படமாக்கப்பட்டபோது, நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு காலில் ஏற்பட்ட காயம் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் காயத்தைப் பொருட்படுத்தாமல் நடித்து முடிப்பார் என படக்குழு தெரிவித்துள்ளது.