Take a fresh look at your lifestyle.

பெண்கள் உடல் மீதான பார்வை மாற வேண்டும்!

நடிகை ஹரிதா வேண்டுகோள்

இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, அனைவரும் ரசிக்கும் வண்ணம், ‘2K லவ் ஸ்டோரி’ படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு D.இமான் இசையமைத்துள்ளார். இயக்குநர் சுசீந்திரனும் இமானும் இணையும் 10 வது திரைப்படம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஜெகவீர், மீனாட்சி கோவிந்தராஜன், இவர்களுடன் லத்திகா, ஹரிதா, பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயபிரகாஷ், வினோதினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

கடந்த பிப்ரவரி 14-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான இப்படம், ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் விமர்சகர்கள் மத்தியிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.

இந்நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களுடன் இணைந்து படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.

பட நிகழ்ச்சியில் பேசிய நடிகை ஹரிதா, இங்கே குண்டாக இருப்பது பற்றியும், ஃபிட்டாக இருப்பது பற்றியும், ஒரு கருத்து இருக்கிறது.

என் உடலை வைத்து சினிமாவில் நிறைய கமெண்ட்கள் கேட்டிருக்கிறேன். அது மாதிரியான இடத்தில், என்னை மதித்து, எனக்கு சுதந்திரம் தந்து, இந்த வாய்ப்பை வழங்கிய சுசீந்திரன் சாருக்கு நன்றி சொல்ல வேண்டும். சினிமாவில் உள்ள பெண்களின் உடலமைப்பு பற்றிய பார்வைகள் மாற வேண்டும்.

இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். நாயகன் ஜெகவீருக்கு இது முதல் படம் போலவே இல்லை. அவ்வளவு நன்றாக நடித்துள்ளார். எங்கள் எல்லோரையும் அழகாகக் காட்டிய ஆனந்த கிருஷ்ணன் சாருக்கு நன்றி. உடன் நடித்த அனைவருக்கும் நன்றி என்றார்.