மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் தன்னுடைய 234-வது படத்தில் நடிக்க உள்ளார். 1987-ல் வெளியான நாயகன் படத்துக்கு பிறகு, கிட்டத்தட்ட 36 வருடங்கள் கழித்து இந்தக் கூட்டணி ஒன்றிணைந்துள்ளது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

மேலும் கமல்ஹாசனுடன், துல்கர் சல்மான், நடிகை த்ரிஷா, ஜெயம் ரவி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் படக்குழு சமீபத்தில் அறிவித்தது.
நடிகர் கமல்ஹாசனின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு இந்தக் கூட்டணியில் உருவாகும் படத்தின் சிறப்பு வீடியோவுடன் தலைப்பையும் படக்குழு அறிவித்திருந்தது.
இந்நிலையில் விருமாண்டி படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்த அபிராமி மீண்டும் கமலுடன் இணைந்து நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கேங்ஸ்டராக நடிக்கும் கமலுக்கு இந்தப் படத்தில் அபிராமி ஜோடியா அல்லது முக்கிய கதாபாத்திரமா என்பதை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விருமாண்டி படத்தில் கமல் – அபிராமி ஜோடி இன்று வரை ரசிக்கும்படி உள்ளதால், இந்த ஜோடி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்பட்டுள்ள செய்தி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
– தேஜேஷ்