நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என அடுத்தடுத்து வெற்றிகளைக் கொடுத்த முன்னணி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், கடைசியாக ரஜினியை வைத்து இயக்கிய தர்பார் திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார்.
சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ள நிலையில், கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பது ஏ.ஆர். முருகதாஸ் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக அறிப்பிக்கப்பட்டது.

ஏ.ஆர்.முருகதாஸ் கதையில், ஏற்கனவே சிவகார்த்திகேயன் மான் கராத்தே படத்தில் நடித்திருந்தார்.
கதையை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனை வைத்து இயக்குகிறார் ஏ.ஆர். முருகதாஸ்.
தற்போது இப்படத்திற்கான இறுதிகட்ட எழுத்து பணிகள் மற்றும் துணை நடிகர், நடிகைகளின் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதனைத் தொடர்ந்து வரும் டிசம்பரில் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
– தேஜேஷ்