Take a fresh look at your lifestyle.

யுவனுடன் இணையும் விக்ரம் பிரபு!

நடிகர் விக்ரம் பிரபு, தனது தனித்துவமான கதைத்தேர்வுகள் மூலம் ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வருகிறார்.

குறிப்பாக டாணாக்காரன் மற்றும் சிறை போன்ற படங்களின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு அவர் தேர்வு செய்யும் கதைகளின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அந்த வரிசையில் உருவாகும் இந்த புதிய திரைப்படம், விக்ரம் பிரபுவின் திரைப்பயணத்தில் 26வது படமாக அமைந்துள்ளது.

அறிமுக இயக்குநர் சித்தார்த் இயக்கத்தில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பு புதிய கமர்ஷியல் படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது.

வித்தியாசமான களத்தில் உருவாகும் இந்த படம் அவரது திரை வாழ்க்கையில் மேலும் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தங்க மார்க்கெட் பின்னணியில் நடைபெறும் சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படம், விறுவிறுப்பான திரைக்கதை, அதிரடி மற்றும் கமர்ஷியல் அம்சங்கள் நிறைந்த, ஆக்சன் திரில்லர் படைப்பாக உருவாக உள்ளது.

சென்னையில் முதல் கட்ட படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகையர் தேர்வு பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்வு செய்து தரமான திரைப்படங்களை தயாரித்தும், வெற்றிகரமாக விநியோகம் செய்தும் வரும் ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம், இந்த புதிய படத்தையும் பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கவுள்ளது.

ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ரவி மோகன் நடிப்பில் ஒரு படமும், ஆகாஷ் முரளி நடிப்பில் மற்றொரு படமும், தற்போது தயாரிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தரமான தொழில்நுட்பம் மற்றும் வலுவான கதையம்சத்துடன் உருவாகும் இப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

ஒளிப்பதிவை கார்த்திக் ஷராஜ் கவனிக்க, படத்தொகுப்பை அருள் மோசஸ் மேற்கொள்கிறார்.