Take a fresh look at your lifestyle.

என் வாழ்க்கையின் மூன்று முக்கிய மைல்கற்கள்!

நடிகர் விஜய் ஆண்டனி நெகிழ்ச்சி

திரையுலகில் தனித்துவமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து, மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தவர் நடிகர் விஜய் ஆண்டனி.

முன்னணி இயக்குநர் சசி இயக்கத்திலும் விஜய் ஆண்டனி நடிப்பிலும், உருவாகியுள்ள திரைப்படம் ‘நூறு சாமி’.

ஜூன் 19 அன்று திரைக்கு வரவிருக்கும் இத்திரைப்படத்தின் முன்னோட்ட விழாவில் கலந்துகொண்டு பேசிய விஜய் ஆண்டனி, தனது திரைப்பயணத்தில் இயக்குநர் சசி அவர்களின் பங்களிப்பை மிகவும் நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்.

விஜய் ஆண்டனி பேசுகையில், தனது திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த 3 முக்கியமான மைல்கற்களை சசி சார் தான் எனக்குக் கொடுத்துள்ளார் என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

“முதலாவதாக, ‘டிஷ்யூம்’ திரைப்படத்தில் இசையமைப்பாளராகப் பணிபுரியும் நல்ல வாய்ப்பை வழங்கியவர் அவர்தான்.

இரண்டாவதாக, எனது நடிப்புத் திறனை உலகிற்கு அடையாளம் காட்டி, பிளாக்-பஸ்டர் வெற்றியைத் தேடித்தந்த ‘பிச்சைக்காரன்’ திரைப்படத்தை இயக்கி என்னை அடுத்த தளத்திற்கு உயர்த்தினார்.

மூன்றாவதாக, தற்போது உருவாகியுள்ள இந்த ‘நூறு சாமி’ திரைப்படத்தின் மூலம் என்னை ஒரு சிறந்த ‘லவ்வர் பாய்’ ஆக மாற்றியதும் அவர்தான்” என்று சசி சாருக்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்.

‘நூறு சாமி’ படம் பற்றிப் பேசிய விஜய் ஆண்டனி, “பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு படமாக இந்தப் படம் இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

அதோடு, சமுதாயத்தில் ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய உன்னதமான கதையம்சம் கொண்டது இத்திரைப்படம்.

எனவே, பொதுமக்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் திரையரங்கிற்கு வந்து இந்தத் திரைப்படத்தைக் கண்டு ரசிக்க வேண்டும்” என்று அன்போடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புதிய பரிமாணத்தில் விஜய் ஆண்டனியைப் பார்க்கவும், சமூக மாற்றத்திற்கான ஒரு நல்ல படைப்பைத் திரையில் ரசிக்கவும் ‘நூறு சாமி’ திரைப்படத்தைக் குடும்பத்தோடு திரையரங்குகளில் கொண்டாடுவோம்!