Take a fresh look at your lifestyle.

உலகைத் திரும்பிப் பார்க்க வைத்த இளம் இசை மேதை!

இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம், 92 இசைக்கலைஞர்களைக் கொண்ட London Symphony Orchestra உடன் இணைந்து தனது முதல் சிம்பொனி ஆல்பமான “Symphony No.1 – New Beginnings”-ஐ பதிவு செய்து சாதனை படைத்துள்ளார்.

இந்த சிம்பொனி பதிவு London நகரில் நடைபெற்றது.

அவருக்கு வரவேற்பளிக்க வைகோ, அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் வன்னியரசு உள்ளிட்டோர் விமான நிலையத்தில் கலந்து கொண்டனர்.

லண்டனில் இசைப்பதிவை வெற்றிகரமாக முடித்த பிறகு, சென்னை திரும்பிய லிடியனுக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.

 ஜூன் 21-ஆம் தேதி ஆல்பத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற உள்ளது. ஆல்பத்தின் ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி Music Academyயில் நடைபெற உள்ளது.

இந்திய இளம் இசைக்கலைஞராக உலகப் புகழ்பெற்ற சிம்பொனி இசைக்குழுவுடன் இணைந்து ஆல்பம் பதிவு செய்தது இசைத்துறையில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக கருதப்படுகிறது.

இது இந்திய இசைத் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தும் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

புகழ்பெற்ற இசை இயக்குநர் மேட்டங்க்லி தலைமையில், 92 இசைக்கலைஞர்களுடன் இணைந்து லிடியன் தனது “Symphony No.1 – New Beginnings” ஆல்பத்தை பதிவு செய்தார்.

இந்த இசையைக் கேட்ட லண்டன் இசைக்கலைஞர்கள் பாராட்டியதாகவும், அதுவே தனது மகிழ்ச்சியை அதிகரித்ததாகவும் லிடியன் நாதஸ்வரம் தெரிவித்துள்ளார்.