Take a fresh look at your lifestyle.

6 மாதங்கள் பயிற்சி எடுத்த குஷ்பு மகள் அவந்திகா!

தாமோ நாகபூஷ்ணம் எழுதி இயக்கியுள்ள புதிய படம் ‘அட்டாக்கர்’. ஜினிமா மீடியா அண்ட் எண்டர்டெயின்மெண்ட் லிமிடெட் சார்பில் தினேஷ் ராஜ் தயாரிக்கிறார்.

இதில், நடிகர் தனுசின் உறவினரும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவருமான பவிஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.

முன்னணி நடிகையான குஷ்புவின் மகள் அவந்திகா கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

இந்தப் படம் பற்றி படக்குழுவினர் கூறும்போது, “வாலிபால் விளையாட்டையும், அதனுடன் தொடர்புடைய கலாசார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘அட்டாக்கர்’, தமிழ் சினிமாவில் வாலிபாலை பிரதான கருவாகக்கொண்டு உருவாகும் முதல் திரைப்படமாக தனித்துவம் பெறுகிறது.

இந்தியாவின் முன்னணி வாலிபால் வீரர்கள் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பவிஷ் – அவந்திகா ஆகியோர் தங்களது கதாபாத்திரங்களுக்காக ஆறு மாதங்களுக்கும் மேலாக தொழில்முறை வாலிபால் வீரர்களுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தென்னிந்தியாவின் முக்கிய பகுதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. படத்தின் அடுத்தக்கட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளனர்.