Take a fresh look at your lifestyle.

என் சிரிப்பு தான் என் பலம்!

நடிகை பூஜா ஹெக்டே

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்து வரும் பூஜா ஹெக்டே, தமிழில் ‘முகமூடி’, ‘பீஸ்ட்’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களில் நடித்தார்.

விஜய் ஜோடியாக அவர் நடித்த ‘ஜனநாயகன்’ திரைப்படம் விரைவில் ரிலீசுக்கு வர இருக்கிறது.

இதற்கிடையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பூஜா ஹெக்டே பேசிய விஷயங்கள் கவனம் ஈர்த்துள்ளன.

“என்னைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒரு புரிதல் இருக்கும். என் குணாதிசயங்கள் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மாறுபடும்.

சிலருக்கு என் நடிப்பு பிடிக்கும். சிலருக்கு என் நடனம் பிடிக்கும். ஆனால், எனக்கு என்னிடம் பிடித்த விஷயம் சிரிப்பு தான்.

எந்தச் சூழலிலும் சோகத்தை, வலியை, வேதனையைக் காட்டாத என் சிரிப்பு தான் என் பலம். அதுதான் என் அடையாளம்” என்று அவர் குறிப்பிட்டார்.