Take a fresh look at your lifestyle.

படப்பிடிப்பு இடைவேளையில் இளைப்பாறும் ‘இரண்யன்’!

பேசும் படம்:

1976-ம் ஆண்டு இயக்குநர் திலகம் என்ற பட்டம் பெற்ற கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் இயக்கத்தில் வெளிவந்த ‘தசாவதாரம்’ திரைப்படத்தில் ஜெமினி கணேசன், கே.ஆர்.விஜயா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இத்திரைப்படத்தில் எம்.ஆர்.ராதா இரண்யனாக சிறப்பாக நடித்தார். அவருக்கு ஜோடியாக சௌகார் ஜானகி மிகப் பொருத்தமாக நடித்திருந்தார்.

படப்பிடிப்பு இடைவேளையின்போது தன்னை பார்க்க வந்த மகள்கள் ராதிகா மற்றும் நிரோஷாவுடன் எம்.ஆர்.ராதா மற்றும் சௌகார் ஜானகி எடுத்துக் கொண்ட புகைப்படம்.