மைத்ரி மூவி மேக்கர்ஸ் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படத்திற்கு ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது!
நல்ல கதையம்சத்துடன் கூடிய இந்த எண்டர்டெயினர் திரைப்படத்தின் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார்!
இந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்று மைத்ரி மூவி மேக்கர்ஸ். ‘புஷ்பா’, ‘குட் பேட் அக்லி’ போன்ற பிளாக்பஸ்டர் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படங்களைத் தொடர்ந்து தயாரித்து வருகிறது.
திரைத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தும் பல படங்களைத் தயாரித்து வரும் இந்நிறுவனம் அடுத்ததாக தனது கிரியேட்டிவ் ஸ்பெக்ட்ரத்தில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது.
இந்நிறுவனம் தமிழில் தயாரிக்கும் மூன்றாவது படமான புரொடக்ஷன் நம்பர் 3 தற்போது ‘மொத ராத்திரி’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
நல்ல கதையம்சம் கொண்ட எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமான இதன் முதல் பார்வை மற்றும் தலைப்பை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று (மே 1, 2026) மாலை அவரது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டார்.
ராஜா கருப்பசாமி இயக்கும் இந்தப் படத்தில் ரிஷிகாந்துடன் ‘சிறை’ மற்றும் ‘யூத்’ படங்கள் மூலம் கவனம் ஈர்த்த அனிஷ்மா அனில்குமார் நடிக்கிறார்.
வழக்கத்திற்கு மாறான ஒரு திருமணம், ஒரு இரவு, இரண்டு அறிமுகமில்லா நபர்கள், ஆச்சரியங்கள், பல பொய்கள் என ஓர் இரவு எல்லாவற்றையும் மாற்றுகிறது என்பதுதான் ‘மொத ராத்திரி’.
இது தொடர்பான அறிமுக நிகழ்ச்சியில் இயக்குநர் ராஜா கருப்பசாமி பேசியவை:
“மைத்ரி மூவி மேக்கர்ஸ் போன்ற பெரிய நிறுவனத்தில் இயக்குநராக அறிமுகமாவது எனக்கு ஸ்பெஷலான ஒன்று. புது ஐடியா மற்றும் திறமையானவர்கள் மீது அவர்கள் வைத்துள்ள நம்பிக்கை எனக்கு பொறுப்பு, மகிழ்ச்சியை ஒருசேர கொடுத்தது.
படைப்பு சுதந்திரத்துடன் எனக்கு விருப்பமான தொழில்நுட்பக் குழுவினருடன் பணிபுரிய அனுமதித்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி.
உணர்வுப்பூர்வமான, அதே சமயம் என்கேஜிங்கான திரையரங்க அனுபவத்தை ரசிகர்களுக்கு ‘மொத ராத்திரி’ திரைப்படம் நிச்சயம் தரும்.
என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பு கொடுத்த தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இருவருக்கும் நன்றி” என்றார்.
என்கேஜிங்கான கதை, புது திறமையாளர்கள் மற்றும் பிரம்மாண்டமான தயாரிப்பு நிறுவனம் என ‘மொத ராத்திரி’ திரைப்படம் புதுமையான அதேசமயம் எண்டர்டெயின்மெண்ட் கதைக்களத்தை ரசிகர்களுக்கு தர இருக்கிறது.
படம் குறித்தான அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.
நடிகர்கள்: ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ. வெங்கடேஷ், பக்ஸ், அப்துல் லீ, ஷெல்லி கிஷோர், சங்கீதா பாலன், பானுபிரியா, சுமித்ரா தேவி. எல், வர்ஷினி கார்மேகம், கார்த்திகேயன், வேலன், கெளஷிக் கபிலன் மற்றும் பலர்.