Take a fresh look at your lifestyle.

ஏப்ரலில் வெளியாகிறது ‘கார்மேனி செல்வம்’!

இயக்குநர்களாக அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் நட்சத்திர நடிகர்களாக வலம் வரும் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் படம் ‘கார்மேனி செல்வம்’.

இயக்குநர் ராம் சக்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் சமுத்திரக்கனி மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்துள்ளனர்.

‘கார்மேனி செல்வம்’ படத்தில் லட்சுமி பிரியா, அபிநயா, கார்த்திக் குமார், படவா கோபி, ரெடின் கிங்ஸ்லி, மதுமிதா, அர்ஜுனன், சங்கர நாராயண், கோதண்டம், கரண் சக்ரவர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.

அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வரும் செல்வத்திற்கு பணத்தின் மீது பேராசை ஏற்பட இதற்கு பிறகு என்ன நடக்கிறது என்பது தான் படத்தின் கருவாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ படம் வருகிற ஏப்ரல் மாதம் 3-ம் தேதி வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு  அறிவித்துள்ளது படக்குழு.