Take a fresh look at your lifestyle.

ரஜினி, கமல், சுந்தர். சி கூட்டணியில் புதிய படம்!

53

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் திலீப்குமார் இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாக இருக்கிறது. இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.

இதைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் படத்தை சுந்தர்.சி இயக்கப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, சுந்தர். சி இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘அருணாச்சலம்’ படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினியின் 173-வது படமான இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படம் 2027-ம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் படத்தை வெளியிடும் என்றும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக கமல்ஹாசன் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “காற்றாய் மழையாய் நதியாய் பொழிவோம், மகிழ்வோம், வாழ்வோம்” என தெரிவித்துள்ளார்.