Take a fresh look at your lifestyle.

நெருங்கிய நண்பர்களுக்கு விருந்தளித்த விஜய்!

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ‘நாளைய தீர்ப்பு’ படத்தின் மூலம் ஹீரோ ஆனவர் விஜய். அவரது தந்தை தயாரித்து இயக்கிய அந்தப் படம் வெற்றி பெறவில்லை.

இதனைத் தொடர்ந்து மேலும் 2 படங்களை மகனை வைத்து இயக்கினார் அவரது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகர்.

அதன்பிறகே விஜய், பிற இயக்குநர்கள் படங்களில் நடிக்கத் தொடங்கினார். அவற்றில் பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, பிரியமானவளே, நினைத்தேன் வந்தாய், திருமலை, கில்லி என பல வெற்றிப் படங்களாக அமைந்தன.

பல படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் படங்களாக அமைந்தாலும், ஒரு நடிகராக தனது படம் ரூ100 கோடி வசூலிக்க வேண்டும் என்பது விஜயின் விருப்பமாக இருந்தது. அந்த ஆசையை நிறைவேற்றிய படம் ‘துப்பாக்கி’.

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில், விஜயுடன் காஜல் அகர்வால், சத்யன், வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

விஜய்க்கு முதல் ரூ100 கோடி கிளப்பில் இணைந்த இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்.

துப்பாக்கி படம் ரூ100 கோடி வசூலித்ததைக் கொண்டாடும் வகையில் விஜய் தனது நண்பர்களை அழைத்து, தனது வீட்டில் விருந்து கொடுத்துள்ளார். இந்த பார்ட்டியில் கலந்து கொண்ட அவரது நெருங்கிய நண்பர் நடிகர் ஸ்ரீநாத், இது குறித்து அண்மையில் மனம் திறந்து பேசினார்.

அந்த பேட்டியின் சுருக்கம்:

“பார்ட்டியின் போது ‘என்ன மாப்பு ரூ100 கோடி க்ளப்புக்குள் போயாச்சி’ என்று நான் மிகவும் சந்தோஷமாக பேசிக்கொண்டு இருக்கிறேன். ஆனால் விஜய், “ஆமாப்பா அப்படித்தான் பேசிக்கிறாங்க” என்று சாதாரணமாகச் சொன்னார்.

அவருடைய மகிழ்ச்சி துக்கம் எதுவாக இருந்தாலும் ரொம்ப கன்ட்ரோலா இருக்கும். வெற்றி, தோல்வி இரண்டும் அவருக்கு ஒன்றுதான்” என்று தெரிவித்தார் ஸ்ரீநாத்.

– பாப்பாங்குளம் பாரதி.