இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜமா. தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தை பாரி இளவழகன் எழுதி, இயக்கியிருக்கிறார்.
கூழாங்கல் படத்தை தயாரித்த லெர்ன் அண்ட் டெக் புரோடக்ஷன் நிறுவனம் ஜமா படத்தைத் தயாரித்துள்ளது. இதில், பாரி இளவழகன் நாயகனாகவும் அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் முக்கியக் கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 2-ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. சமீபத்தில் இதன் டீசரை வெளியாகி கவனம் ஈர்த்தது.
இந்நிலையில் இந்தப் படத்தின் முதல்பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இளையராஜா எழுதி இசையமைத்துள்ளார். யுவன் ஷங்கர் ராஜா, ஜஸ்டின் பிரபாகன் இந்தப் பாடலை வெளியிட்டுள்ளார்கள்.