Take a fresh look at your lifestyle.

மம்முட்டியுடன் நடிக்கும் இயக்குநர் கவுதம்!

டைரக்ஷனில் மட்டுமே கவனம் செலுத்தி வந்த இயக்குநர்கள், நடிகர்களாக இன்னொரு அவதாரம் எடுப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர் பாரதிராஜா.

அவரை பின்பற்றி ஆர். சுந்தரராஜன் உள்ளிட்ட ஒரு டஜனுக்கும் மேற்பட்ட டைரக்டர்கள் இன்றைக்கு நடிகர்களாக உலா வருகிறார்கள்.

அவர்களில் ஒருவர் கவுதம் வாசுதேவ் மேனன். படம் இயக்குவதுடன் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் கௌதம் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தமிழில் அவரது நடிப்பில் விடுதலை, டக்கர், கருமேகங்கள் கலைகின்றன, லியோ ஆகிய படங்கள் வெளியானது.

தெலுங்கில் மைக்கேல், உஸ்தாத் என இரு படங்களிலும், மலையாளத்தில் மூன்று படங்களிலும் அவர் நடித்து வருகிறார். மலையாளத்தில் கவுதம் நடிக்கும் படங்களில் ஒன்று -‘பஸுகா’.

மம்முட்டி நடித்துவரும் இந்தப் படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார் கவுதம் மேனன்.

இதனை மம்முட்டி தனது இணையதளப் பக்கத்தில் அறிவித்துள்ளார். பெஞ்சமின் ஜோஷ்வா என்ற கதாபாத்திரத்தில் கௌதம் நடித்துள்ளதாக அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக்ஷன் த்ரில்லராக உருவாகியிருக்கும், பஸூகாவை அறிமுக இயக்குநர் டீனோ டென்னிஸ் இயக்கியுள்ளார்.

‘பஸூகா’ படத்தில் காயத்ரி, சன்னி வைய்ன், ஷைன் டாம் சாக்கோ, ஜெகதீஷ், சித்தார்த் பரதன், ஐஸ்வர்யா மேனன், காலித் ரஹ்மான் ஆகியோரும் நடித்துள்ளனர்.

விக்ரம் நடிப்பில், கௌதம் மேனன் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைக்கு வருவது தடைபட்டுவரும் நிலையில், அறிமுக நடிகரை வைத்து கௌதம் இயக்கியிருக்கும் ஜோஷ்வா இமை போல் காக்க படம் மார்ச் 1 ம் தேதி திரைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

– பாப்பாங்குளம் பாரதி.